ஆறுசாமி என்ற ஜமீன்ந்தாா்

0
394

ஆறுசாமி என்ற ஜமீன்ந்தாா், அந்த ஊரில் பெரிய அரண்மனை போல ஒரு வீடு மட்டும் இருந்தது. தலைமுறை தலைமுறையாக வரும் ஜமீன்ந்தார் வீடு அது.அந்த வீட்டில் ஆறுசாமி மற்றும் அவருடைய மனைவி பார்வதி வசித்து வருகின்றனர்.

ஆறுசாமி விடியற்காலையிலேயே எழுந்து ரெடியாகி அவருடைய தோட்டத்திற்கு சென்றுவிடுவார்.
பார்வதி காபி எடுத்துகக்கொண்டு வருகிறார்.

“என்னங்க, இந்தாங்க காபி”

“பார்வதி இப்படி குடு. இன்னைக்கு நான் வர சாயங்காலம் ஆகிவிடும். எதிர்பார்க்க வேண்டாம்

“இன்னைக்கு என்னங்க?”

“தேங்காய் பறிக்க வருவாங்க. மொத்தம் பத்து லாரிக்கு மேல வரும்னு நினைக்குறேன்.”

“அப்படிங்களா…”

“சரிடி, நான் கிளம்புறேன்”

ஆறுசாமி தோட்டத்துக்கு செல்கிறார்.

அவர் வீட்டில் இருந்து five கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அவருடைய தோட்டம்.

பத்து ஏக்கரில் மொத்தம் 4000 தென்னை மரங்கள். ஒவ்வொரு தென்னை மரத்திலும் குழைகுழையாய் காய்கள்.

அவர் தோட்டத்தை சென்றடைந்த போது அங்கு வரிசையாக பத்து பதினைந்து லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எல்லாம் தேங்காய்களை ஏற்றி செல்லத் தான்,,

ஒவ்வொரு லாரியிலயும் 10 ஆயிரம் தேங்காய்களை எண்ணி லொடு ஏற்றிக் கொண்டு இருந்தார்கள்.

கோபால் அவர் தோட்டத்தில் பதினைந்து வருசமா வேலை செய்து வருகிறான். கிட்டதட்ட அவன் ஆறுசாமிக்கு  பிஏ போல…

அவனை தேடினார்.

“டேய் கோவாலு… எங்கடா இருக்க?”

‘ஒரு வேலை பயல் லாரி பக்கம் இருப்பானோ’

கூப்பிட்டு பார்த்தும் அவன் வராததால் அவர் லாரி இருக்கும் பக்கமாக செல்கிறார்.

முத்து  மொத்த வியாபாரி. பல வருடங்களாக அவரிடம் தான் மொத்தமாக தேங்காய்களை வாங்குவது வழக்கம்.

பணத்தை ஒரு பையில் போட்டு எடுத்து வந்து கொண்டிருக்கிறான்.

ஆறுசாமி, “என்ன முத்து எல்லாம் சரியா இருக்கா?”

“இந்தாங்க, நீங்களே எண்ணிப் பார்த்துக்கோங்க ஐயா…”

“அட நான் பணத்தை சொல்லலடா, தேங்காய்களை கேட்டேன்… எல்லாம் சரியா இருக்கான்னு..”

“அதெல்லாம் சரியா தான் இருக்குதுங்க”

பணப் பையை அவரிடம் கொடுத்தான்.

அதில் மொத்தம் இரண்டு இலட்சம்.

“இந்த கோவாலு பயல் எங்கே போயிட்டானு தெரியலயே? இங்க வேலை நடந்துக்கிட்டு இருக்கு. அதை கவனிக்காம எங்கே போய் தொலைச்சான்?” கோபத்துடன் முணுமுணுத்துக் கொண்டு நடந்தார்.

அதோ கோபால் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்.

“டேய், எங்கடா போன?” கோபத்துடன் கேட்டார்.

என் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்ல, அதான் ஆஸ்பத்திரி கூட்டி போயிட்டு வந்தேன் எசமான்” என்றான்.

“அப்படியா சரி, இப்ப எப்படி இருக்கா? இன்னைக்கு வேலை செய்யும் கூலிகளுக்கு சம்பளம் தர வேண்டும். மத்தியானம் எல்லாரையும் வரச் சொல்லு.”

“சரிங்க எசமான்”

மதியம் சம்பளம் வாங்க எல்லோரும் வரிசையாக நின்று கொண்டிருந்தனர் கூலிகள்.

கணக்குப் பிள்ளை பெயர் குறிப்பிட்டு கூறி கொண்டிருந்தார்.

ஆறுசாமி எல்லாருக்கும் சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

கடைசியாக கோபாலுக்கு.

கோபால் வெளியில் வந்து அவரிடம்,

“எசமான்! இன்னும் 3 ஆயிரம் சேர்த்துக் கொடுங்க, பொண்டாட்டி ஆஸ்பத்திரி செலவுக்கு காசு பத்தல பத்து நாள்ல திரும்ப கொடுத்துடுறேன்.”

“அதெல்லாம் எதுக்குடா? பல வருஷம் என்கிட்ட நம்பிக்கையான ஆளா இருக்க… இந்தா இதில் five ஆயிரம் ரூபாய் இருக்கு.…

“நன்றிங்க எசமான்…”

“என்ன நன்றி, பன்றின்னுகிட்டு… போய் வேலையைப் பாரு.”

1 மணி  நேரம் கழித்து,

அங்கு ஒரு கூட்டம். எல்லாரும் வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.

“இந்தாப்பா உனக்கு இன்னிக்கு சம்பளம்” அடுத்தமுறை நாங்க கூப்பிட்டா மட்டும் வந்தா போதும். என்று சொல்லிவிட்டு அனுப்பிக்கொண்டு இருந்தார்கள்.

கடைசியாக ஆறுசாமி!

அவர் கையில் 500 கொடுத்து… “இன்னைக்கு உன்னோட நடிப்பு நல்லா வந்திருக்கு. டேக் இல்லாம ஒரே சீன்ல சீக்கிரம் முடிச்சாச்சி… இந்தா உனக்கு இன்னைக்கு கூலி”

ஆறுசாமி அதை வாங்கிக் கொண்டு நடந்தாா்.

-திரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here