எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது

0
180
sraa

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டன, தமிழில் எந்த படைப்புக்கு விருது கிடைக்கும் என்பது பற்றி எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டது, இந்நிலையில் 2014ம் ஆண்டு எழுதப்பட்ட நாவலுக்காக எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது,

கரிசல் மண்ணில் ஏழ்மை நிலையில் வாழும் நாதஸ்வரம் மற்றும் தவில் இசை கலைஞர்களின் வாழ்க்கையை பற்றி கூறும் இந்த நாவல்,  வானம் பார்த்த பூமி கரிசல் காடுகளில் ஏற்பட்டுள்ள மக்களின் வாழ்வியல் மாற்றங்களை ஆவணப்படுத்துகிறது். எழுத்தாளர் கி ராஜநாராயணன் இந்த புத்தகத்தை எஸ் ராமகிருஷ்ணனுக்கு சமர்ப்பித்திருந்தார்.

சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தொிவித்தாா்.  தமிழ் எழுத்துலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் எஸ் ராமகிருஷ்ணன் என புகழாரம் சூட்டியுள்ளார்.

எண்ணற்ற இலக்கிய படைப்புகளை உருவாக்கிய ராமகிருஷ்ணன் மேலும் பல விருதுகளைப் பெற்று தமிழுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வாழ்த்து தொிவித்துள்ளாா்.

இதேபோல தினகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து தொிவித்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here