கடகம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020

0
239

கடகம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020

மதிப்பெண் 98/100

தற்போது இராகு பகவான் பனிரண்டாம் இடத்திற்கு கேது பகவான் ஆறாமிடத்திற்கும் வருகிறார்கள்.

இதனால் என்ன பலன் என்று பார்ப்போம்.

குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனம் சேரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புது வேலை அமையும். சொந்த பந்தங்கள் உங்களை புரிந்து கொண்டு பாசம் காட்டுவார்கள்.

கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரிவடையும். வீட்டில் தள்ளிப் போய் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும்.

உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

இந்த ராகு கேது பெயர்ச்சியில் ராகு அவ்வப்போது சின்ன சின்ன கலக்கங்களை தந்தாலும் கேதுவால் நீண்ட கால கனவுகளெல்லாம்
நிறைவேறும்.

For More Information Click Link Above.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here