கடன் கொடுத்தவன்

0
317

கடன் கொடுத்தவன், இது நான் எழுதிய முதல் சிறுகதை. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.  நன்றி!

மோகன் மற்றும் அவருடைய நண்பர் ரவி தெரு வழியாக பேசிக் கொண்டு நடந்து போகின்றனர்..

“ரவி நாம் இந்த வழியாக போக வேண்டாம். வேற வழில போகலாம்”

“ஏன்டா.. இது தானே பக்கம்?” ரவியைப் பார்த்து மோகன் கேட்டான்.

அதற்கு ரவி “வேண்டாம்டா”

“ஏன்” இது மோகன்.

“எல்லாம் கடன் பிரச்சினைதான்டா” என்று ரவி சொல்கிறான்

“கடன் பிரச்சினையா? எவ்வளவு கடன் வாங்கி வச்சிருக்கே? அப்படி கடன் வாங்குற அளவுக்கு உனக்கு என்ன கஷ்டம்?” மோகன் கேட்கிறான்.

“இல்லடா.. நான் கடன் வாங்கவில்லை கடன் கொடுத்திருக்கிறேன்” என்று சொல்கிறான்.

மோகனுக்கு ஒன்றுமே புரியவில்லை..   “என்னடா குழப்புறே”

“ஒன்றுமில்லைடா இந்த தெருவுல இருக்குற ஒரு பெரியவர் என்கிட்ட  கடன் வாங்கி இருக்கிறார். அவர்  கஷ்டத்தில் இருக்கிறார் அதனால் அந்த கடனை அவரால் திருப்பி தர முடியவில்லை. அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. இருந்தாலும் நான் அந்த தெரு வழியாக போகும் போது அவர் என்னை பார்த்தால் வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்படுவார் எனக்கும் அது வருத்தத்தை தரும்.  அதனால தான்டா நான் வேற வழியா போகலாம்னு  சொன்னேன்.” என்றான் ரவி.

ரவியைப் பார்த்து மோகன் வியந்தான். இப்படியும் ஒருத்தனா! என்று…

-திரு

https://www.thirupress.com/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here