கன்னி- ராகு கேது பெயர்ச்சி 2019-2020

0
223

கன்னி- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020

மதிப்பெண் 80/100

தற்போது இராகு பகவான் பத்தாமிடத்திலும்,கேது பகவான் நான்காமிடத்தில் வந்து இருக்கிறார்.

“சும்மா போங்கண்ணே!நீங்க கன்னி ராசிக்கு நல்லாயிருக்குமுனு சொல்றீங்க ஆனால் கஷ்டம்தான் அதிகம் ஆகுதே தவிர குறைய மாட்டேங்குதுனு”நீங்க சொல்றது புரியுது!

கன்னி ராசிக்கு சனி பகவான் அரிஷ்டடாம சனியாக இருந்து கொண்டு பாடாய் படுத்துகிறார் என்பது உண்மை!ஆனால் எந்த இன்னல்களையும் சமாளிக்க கூடியவர்கள் கன்னி ராசியினர் எதற்கும் கவலை பட வேண்டியதில்லை.

இப்போது ராகு கேது பெயர்ச்சி பலன்களை பார்ப்போம்.

உங்களிடமிருந்த பய உணர்வு, தடுமாற்றம் எல்லாம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். உங்களின் நல்ல மனசை புரிந்து கொண்டு சிலர் உங்களுக்கு உதவுவார்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

குலதெய்வக் கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

உங்களுடைய நிர்வாகத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்கள் மத்தியிலிருந்த கசப்புணர்வுகள் நீங்கும்.

பழைய கடனில் ஒருபகுதியை அடைக்கும் அளவிற்கு பணவரவு உண்டு. இந்த ராகு சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாக தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார்.

சிலர் செய்துக் கொண்டிருக்கும் தொழிலுடன் வேறு சில வியாபாரமும் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். உங்களிடமிருந்த பய உணர்வு, தடுமாற்றம் எல்லாம் நீங்கும்.

இந்த ராகு-கேது மாற்றம் உங்களை ஓய்வின்றி பரபரப்பாக செயல்பட வைத்தாலும், சகிப்புத் தன்மையாலும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையாலும் ஒரளவு முன்னேற்றம் தருவதாக அமையும்.

For More Information Click Link Above.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here