சந்திராஷ்டமும் பரிகாரமும்

0
138

சந்திராஷ்டமும்,பரிகாரமும்

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு எட்டாம் ராசியில், அதாவது அஷ்டம ராசியில் கோசார சந்திரன் பயணம் செய்யும் நாட்களே சந்திராஷ்டமம் ஆகும்.

உதாரணமாக பூசம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவரது ஜென்ம ராசி கடகம்.. கடகத்திற்கு எட்டாம் ராசியான கும்பத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இந்த நாளில் மனக்குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிலும் தோல்வி போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும்.

சந்திராஷ்டம நாளில் வெண்மையான ஆடைகளை உடுத்தலாம்.சிவனின் அருகில் உள்ள அம்பாளை வழிபடவேண்டும்.

வாகன பயணங்களை தவிர்க்கவேண்டும்.சுப காரியங்களை தவிர்க்கலாம்.தேவையில்லாமல் யாரிடமும் பேசக்கூடாது.இதை கடைபிடித்தாலே போதும் சந்திராஷ்டமம் நம்மை ஒன்றும் செய்யாது.

Credited by: பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here