துலாம – ராகு,கேது பெயர்ச்சி 2019-2020

0
149

துலாம – ராகு,கேது பெயர்ச்சி 2019-2020

மதிப்பெண் 90/10

தற்போது இராகு பகவான் ஒன்பதாம் இடத்திற்கும்,கேது பகவான் மூன்றாம் இடத்திற்கும் வந்துள்ளனர்.

இது எந்த மாதிரியான பலனை கொடுக்கிறது என பார்ப்போம்.

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனதில் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.

வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி கூடும்! இனி குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள்.

வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள்.

வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

சொந்த-பந்தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் நெருங்கியவராக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமைவர்.

அரசால் ஆதாயம் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்சனை நல்ல விதத்தில் முடிவடையும்.

மூன்றில் இருக்கும் ஒன்பதில் இருக்கும் ராகுவாலும் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் அதிகமாகும். பாகப்பிரிவினை பிரச்னையை சுமூகமாக தீர்க்கப்பாருங்கள். கோர்ட், கேஸ் என்று போக வேண்டாம்.

சகோதர வழிகளில் கருத்து வேறுபாடு வந்து போகும்.

Credited by: அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

For More Information Click Link Above.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here