நாளை நல்லபடியாக துவக்குவது எப்படி?

0
335

நாளை நல்லபடியாக துவக்குவது எப்படி?

Neander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வு

வெற்றிகரமான மனிதர்கள் வாழ்க்கையில் எடுக்கும் அனாவசிய முடிவுகளின் எண்ணிக்கையை மிக குறைத்துக்கொள்வார்கள். அனாவசிய முடிவுகளும், செயல்களும் போர் அடிக்கும் ஒரு ரொடினில் அமைந்துவிடும்.

உதாரணமாக அமெரிக்க அதிபராக இருந்த எட்டு ஆன்டுகளும் ஒபாமா இரு வித உடைகளை மட்டுமே அணிந்தார். நீல கலர் சூட்டு, அல்லது கிரே கலர் சூட்டு. இந்த இரு நிறங்களில் மட்டுமே நிறைய செட்டு உடைகளை வாங்கி வைத்துக்கொண்டார். இவர் மட்டுமல்ல, மார்க் சுக்கர்பர்கும் தொடர்ந்து தினமும் கிரே கலர் டிசர்ட்டு மட்டுமே அணிவார். இதற்கான காரணம் இப்படி தொடர்ந்து ஒரே நிற உடையை அணிவது உடைகளின் தேர்வில் எடுக்கும் நேரத்தை மிச்சபடுத்துகிறது, ஏகபப்ட்ட முடிவுகளை தவிர்க்க உதவுகிறது என்பது மட்டுமே.

“இன்று மெக்சிகோ ஜனாதிபதி வருகிறார். என்ன கலர் கோட்டு சூட்டு போடலாம்” என எல்லாம் உட்கார்ந்து யோசிக்க அவர்கள் நேரம் எடுத்துகொள்வதில்லை. யார் வந்தாலும், எங்கே போனாலும் யூனிபாரம் மாதிரி ஒரே உடைதான். மார்க் சுக்கர்பர்கும் அப்படித்தான்.

உணவும் அப்படித்தான். உணவை ஒரு ரொடினுக்கு கொன்டுவந்துவிடவேண்டும். தினமும் காலையில் வித விதமாக சாப்பிட்டு பழககூடாது. ஒரு நாளைக்கு இட்டிலி, ஒரு நாளைக்கு தோசை, இன்னொரு நாள் உப்புமா என சாப்பிட்டுவதை விடுத்து தினமும் ஒரே மாதிரியான காலை உணவை உண்ண பழகிக்கொள்ளவேண்டும். உதாள் தினம் காலை பட்டர் டீ, 3 வேக வைத்த முட்டை..அதையும் முன் தினமே வேகவைத்து ப்ரிட்ஜில் வைத்துவிட்டால் காலை எழுந்து உணவுக்கு என்ன செய்வது என திட்டமிட்டுகொன்டிருக்கவேண்டியதில்லை.

இதனால் போர் அடிக்காதா என கேட்கலாம். பாயிண்டே அதுதான்.ரொடின் என வந்தால் போரடிக்க தான் செய்யும். ஆனால் பழகிக்கொண்டால் எத்தனை நேரம், ஷாப்பிங் ட்ரிப்பை இதில் வீணடிக்கிறோம் என நினைத்தால் வியப்பாக இருக்கும்.

நாளை நல்லபடி துவக்க:

அதிகாலையில் எழுந்திருக்கவேண்டும். காலையில் ரொம்பநேரம் தூங்கி நேரத்தை வீணடிக்ககூடாது.

அய்யோ..நான் மார்னிங் பர்சன் இல்லை. இரவு ரொம்ப நேரம் தூங்குவேன். அதிகாலையில் எல்லாம் எழமுடியாது என்கிறீர்களா?

அது எல்லாம் பிரச்சனை இல்லை. ஒரு நாலைந்து நாளைக்கு தொடர்ந்து ஆறு மணிக்காவது அலாரம் வைத்துக்கொன்டு எழவும். தூக்கம் கெடும்..அதன்பின் இரவு 10, 11 ம்ணிக்கு படுத்து தூங்க பழகிவிடுவீர்கள் காலை எழுந்ததும்:

உடனே செல்போனை தேடகூடாது  பேஸ்புக், வாட்ஸாப் எல்லாம் இரவு உறங்குகையில் அந் இன்ஸ்டால் செய்யவேண்டும் என முன்பு சொல்லியிருப்பதை நினைவில் கொள்ளவும் 

காலை எழுந்ததும்

முதல் வேலை படுக்கையை, தலையணை, மெத்தையை சரி செய்தல்

எடுத்தவுடன் வெட்டி வேலையா என டென்சனாகவேண்டாம்…இது தான் இருப்பதிலேயே முக்கியமான வேலை ஊரை, நாட்டை, உலகை ஒழுங்குபடுத்துமுன் உன் வீட்டை ஒழுங்குபடுத்து என்பது பழமொழி. உங்கள் தலையணை, போர்வையை நீங்கள் மடிக்காமல் மனைவியோ, தாயோ மடிக்கும் வழக்கம் இருந்தால் மாற்றிக்கொள்ளவும். உங்கள் முதல் வேலையை நீங்கள் செய்து பழகவும்.

சொன்னால் நம்ப கடினமாக இருக்கும். ஆனால் படுக்கையை ஒழுங்குபடுத்துவதை பற்றி நிறைய ஆய்வுகள் நடைபெற்று உள்ளன. இது பற்றி நூல்கள் கூட எழுதபட்டு உள்ளன. வெற்றிகரமான மனிதர்கள் பலரும் தன் படுக்கையை தானே மடித்து, ஒழுங்குபடுத்துபவர்களே.

இதை தினமும் நீங்கள் செய்து, உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுங்கள். அனைவரின் படுக்கை, தலையணை, போர்வைகளை காலையில் அவர்களே மடித்து வைக்கவேண்டும். “டைம் இல்லை, இன்று பரிட்சை” இது எல்லாம் எக்ஸ்கியூஸ் அல்ல….என்ன அவசரம் என்றாலும் பல் துலக்காமல், காபி குடிக்காமல் கிளம்புவது இல்லை அல்லவா? இதுவும் அம்மாதிரிதான்.

அடுத்த வேலை நன்றி தெரிவித்தல். நன்றி யாருக்கு?

அமைதியான ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கவும். பணத்தால் விலை கொடுத்து வாங்கமுடியாத எத்தனை நல்ல விசயங்கள் உங்களிடம் இருக்கின்றன என நினைத்து பார்க்கவும். பாசமான குடும்பம், எந்த வியாதியும் இல்லாத உடல், நட்புகள்..

நேற்று இரவு உங்களுக்கு இரவு உணவை சமைத்த தாய் அல்லது மனைவி, பணியிடத்தில் உதவிய நண்பர்…இவர்களை நினைக்கவும். நன்றி செலுத்தவும்.

இதை தியானம், பிரார்த்தனை, ரெப்ளெக்ஷன் என எப்படியும் கருதிக்கொள்லலாம். ஆனால் நாளை பாஸிடிவாக துவக்க இது நல்ல வாய்ப்பு. பணத்தால் வாங்கமுடியாத விச்யங்களுக்கு மட்டுமே நன்றி செலுத்தவும். இதற்கு ஒரு ஐந்து நிமிடம் மட்டுமே ஆகும். ஆனால் உள்ளுக்குள் இது மிக பாஸிடிவான மாற்றங்களை உருவாக்கும்.

ஆக ஆறு நிமிடங்கள் மட்டுமே கடந்துள்ளன. இதுவரை இரு முக்கிய வேலைகளை செய்து முடித்துள்ளீர்கள்.

அடுத்து பல்துலக்கி குளிர்நீர் பருகுவது. இரவு உறங்குகையில் ஏராளமான நீர் உடலை விட்டு வெளியேறி இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் நீர் பருகுவது அதை சரிசெய்ய உதவும்.

அடுத்து

உடல்பயிற்சி…வாக்கிங், ஜாகிங் எல்லாம் பசித்த நிலையில் செய்வது மிக நல்லது. வாக்கிங் மாலையில் செல்லும் வழக்கம் உள்ளவராக இருப்பினும் காலையில் சும்மா ஒரு கிமியாவது நடந்துவருவது அவசியம். இது நாளை சுறுசுறுப்பாக துவக்க உதவும்.

இன்னமும் காபி, டி என எதையும் குடிக்கவில்லை என நினைவில் கொள்ளவும். காலையில் எழுந்தவுடன் டீ, அல்லது காபி+ செய்தித்தாள் என அமர்ந்தால் 1 மணிநேரம் வீண். மனதில் கொள்ளவும். இந்த நிமிடம் வரை

நாலு முக்கிய வேலைகளை செய்துமுடித்துள்ளீர்கள்

ஒரு கலோரி கூட உடலில் இறங்கவில்லை

எந்த விதமான பேஸ்புக், வாட்ஸாப், மின்னஞ்சலையும் படிக்கவில்லை…

அடுத்து:

இந்த நாளில் செய்துமுடிக்கவேண்டிய வேலைகள் என்ன என ஒரு தாளில் எழுதவும். அல்லது முந்தினம் இரவே எழுதி வைத்துவிடவும். அப்படி எழுதி இருந்தால் அதை காலையில் எழுந்து நோட்டம் இடவும். அதை எப்படி, எப்போது செய்வது என திட்டமிடவும்.

அடுத்து:

காலை உணவு+காபி..ரொம்ப நேரம் எடுக்கவேண்டாம். முன்பே சொன்னதுபோல போரடிக்கும் காலை உணவை உண்டுவிட்டு பட்டியலில் உள்ள வேலைகளை செய்யதுவங்கவும். அல்லது ஆபிஸ் கிளம்பவும். எந்த சமூக ஊடகத்தையும் வீட்டில் காலையில் எழுந்து பார்க்கவேண்டாம். பார்த்தால் காலை எழுந்தவுடன் மிக நெகடிவான செய்திகள் தான் கண்ணில் படும். நாளை பாஸிடிவாக துவக்குவது மிக முக்கியம். நெகடிவ் செய்திகளை காலையில் பார்த்துக்கொண்டிருக்கவேண்டாம். பேப்பரையும் படிக்கவேண்டாம்.

ஆபிஸ் சென்று பட்டியலில் உள்ல வேலைகளில் முக்கியமானவற்றை செய்த்முடித்தபின்னரே சமூக ஊடகங்களை பர்ப்பது என்பதை பற்றி யோசிக்கவேண்டும்.

ஆக நாளை பாஸிடிவ் ஆக துவக்க இது நல்ல வழி.

நாளை நாளை பாஸிடிவாக கொன்டு செல்ல, நாளை பாஸிடிவ் ஆக முடிக்க என்ன செய்வது என பார்ப்போம்.

நன்றி வணக்கம்

Neander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here