மதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.

0
338

மதிப்பெண் அடிப்படையிலான கல்வியும், தகுதி எனும் மாயையும்.

Neander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வு

அரசு பள்ளிகளில் தரம் இல்லை, தனியார் பள்ளிகளில் தான் தரம் இருக்கிறது என தான் அந்த விவாதம் துவங்கியது.

தரம் என்றால் என்ன? என கேட்டேன்

மதிப்பெண்கள். என பதில் வந்தது.

அப்படி தனியார் பள்ளியில் படித்து, டியூசன் மேல் டியூசன் வைத்து +2வில் 1200க்கு 1199 மதிப்பெண்களை எடுத்துக்கொண்டு தனியார் கல்லூரிக்கு போனால் அவருக்கு டொனேசன் வாங்கிக்கொன்டுதானே அட்மிசன் கொடுப்பார்கள்? தகுதி இருக்கு, தரம் இருக்கு, மதிப்பெண் இருக்கு, ஆங்கிலம் வெள்ளகாரனை போல பேசறான் பையன் என டொனேசனில் பத்து பைசாவையாவது குறைப்பார்களா? ஆக 12 வருசம் பெற்றோர் கடன்பட்டு பிள்லையை லட்சகணக்கில் பீஸ் கட்டி படிக்க வைத்தாலும் காசு கொடுத்து தான் காலேஜில் சேரணும். அரசு பள்ளியில் படித்து 40% மதிப்பெண் வாங்கி பாஸ் ஆனாலும் காசு கொடுத்து தான் தனியார் கல்லூரிகளில் சேரமுடியும். ஆக இங்கே தரம் என்ன்பதுக்கு என்ன மதிப்பு?

படித்து முடித்தபின் நீங்கள் காலேஜில் 99% மார்க் வாங்கினீர்களா, 40% மார்க் வாங்கினீர்களா என வேலை கொடுப்பவன் கவலைபடபோவது கிடையாது. “டிகிரி இருக்கா, சரி அப்ப இண்டர்வியூவுக்கு வந்து கேள்விக்கு பதில் சொல்லு. நல்லா பெர்மார்ம் பண்ணா வேலை”. இண்டர்வியூவுக்கு போனால் உங்களை விட பெரிய கல்லூரியில் எம்பிஏ படித்தவர் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசி இண்டர்விட்யூ எடுப்பார். அவருக்கு சம்பளம் கொடுக்கும் கம்பனி முதலாளி பத்தாம் வகுப்பு படித்தவராக இருப்பார்.

நீங்கள் செய்யும் வேலைக்கு நீங்கள் படித்த டிகிரி பயன்படுகிறதா? கம்பனி நிர்வாகிகளை கேட்டால் தலை தலையாக அடித்துகொள்கிறார்கள். “நாங்க இங்கே பிரஷ்ஷரை எடுத்து நாலு வருசம் டிரெய்னிங் கொடுத்தா தான் அவன் ஒரு அளவுக்கு ரெடி ஆகறான். புதுசா வர்ரவங்களுக்கு எதுவுமே தெரியாது. +2 படிச்சவனை எடுத்து டிரெய்னிங் கொடுத்தாலும் இதே பெர்பார்மன்ஸை காட்ட முடியும். டிகிரியின் பயன் என்ன?” என

ஏன் இப்படி ஆனது?

நம் கல்விமுறை ஒரு விதமான திறமையை மட்டுமே ஊக்குவிக்கிறது. நாள் முழுக்க தலைகுனிந்து பெஞ்சில் உட்காரணும். நாள் முழுக்க படிச்சுகிட்டே இருக்கணும். ஆசிரியர் சொல்வதை கேட்கணும். குறும்பு பண்ணகூடாது. ஒரு நாளைக்கு 12 மணிநேரம் படிச்சவனை 13 மணிநேரம் படிச்சவன் ஓவர்டேக் பண்ணுவான். அவனை நீ ஜெயிக்கணும்னா நீ 14 மணிநேரம் படிக்கணும்…

என்ன கொடுமை ஐயா இது?

படைப்புதன்மை, சுறுசுறுப்பு உள்ள மாணவன் இதுக்கு எப்படி ஒத்துவருவான்? அவன் அதனால் கடைசி பெஞ்சுக்கு போய் உட்கார்ந்து கொண்டு ரகளை, குறும்பு என இயல்பாக அந்த வயது மாணவர்கல் எப்படி இருக்கிறார்களோ அப்படி இருக்கிறான். அதை திறமையின்மை, சோம்பேறித்தனம் என நாம் எப்படி முடிவுகட்ட முடியும்? அவன் தான் வளர்ந்து கம்பனிகளை துவக்கியும், விளையாட்டு, சினிமா என கலைத்துறைகளில் ஜெயித்தும் முதல் பெஞ்ச் மாணவர்களுக்கு வேலை கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறான்.

கடைசி பென்ச்ஜ் மாணவர்களை நாள் முழுக்க ரூமில் கட்டிபோட்டு ரம்பம் போடுவதை விட வெளியே கூட்டிப்போய் விசயங்களை பிராக்டிகலாக காட்டுவது தான் பலனளிக்கும். அத்தகைய கல்விமுறையே அவசியம்.

அது எங்கே இருக்கு என கேட்காதீர்கள். எங்கேயும் கிடையாது. சில பள்ளிகளில் பரிட்சார்த்தமாக desk free classroom என அமுல்படுத்தி வருகிறார்கள். நம் படிப்புமுறையை கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு ஏற்ப மாற்றினால் மட்டுமே முதல் பெஞ்சு மாணவ்ர்களுக்கு நடக்கும் கொடுமைகளில் இருந்து விடுவுகாலம் பிறக்கும். அதை விட்டுவிட்டு மதிப்பெண் அடிப்படையிலான கல்விமுறை மட்டுமே த்ரத்தின் அளவுகோல் என காமடி பண்ணுவது நல்லா இல்லை.

நன்றி வணக்கம்

Neander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here