மிதுனம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020

0
197

மிதுனம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020

மதிப்பெண்.95/100.

உங்கள் ராசிக்கு லக்கினத்தில் ராகுவும்,ஏழில் கேதுவும் வருகிறார்கள்.

இதனால் ஏற்படப்போகும் பலன்களை பார்ப்போம்.

உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள்.

நேர்மறை எண்ணங்கள் உருவாகும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். தடைப்பட்டு, தள்ளப் போன காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடிவடையும். சந்தேகத்தாலும், ஈகோவாலும் பிரிந்திருந்த கணவன்&
மனைவி,காதலன் காதலி ஒன்று சேருவீர்கள்.

சாதுக்கள், சித்தர்களின் ஆசி பெறுவீர்கள். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த வெளி மாநிலப் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகமாகும்.

பெண்கள் விசயத்தில் கவனம் தேவை!யாருக்கும் பிணை போடாமல் இருப்பது நண்மை!உறவினர்களிடம் நிதானமாக பழகினால் உறவு சீராக இருக்கும்.எல்லோரும் உங்களை போல் இருக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டாம்.

For More Information Click Link Above.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here