மேசம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020

0
210

மேசம்

மதிப்பெண்- 99/100

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு ராகுவும்,ஒன்பதாம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள்.

இது ஒரு நன்மையை தரக்கூடிய அமைப்பாகும்.

இதுவரைக்கும் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் கிடைக்கும்.

உங்களுக்கு இருக்கும் பிரச்னைகள் யாவும் பகலவனை கண்ட பனி போல் விலகிவிடும்.

உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க நினைத்தவர்கள் தவிடுபொடியாகி விடுவார்கள். பெயர், புகழ், செல்வாக்கு பலருக்கு உதவி செய்வது என உயர்வீர்கள். மற்றவர்களை உங்களது வாக்கு சாதுர்யத்தால் நயமாகப் பேசி வென்று விடுவீர்கள்.

அதோடு உங்களின் பேச்சாற்றலால் பணவரவும் உண்டாகும். பல அரிய சந்தர்ப்பங்களைக் கோட்டை விட்டவர்கள் இப்பொழுது மீண்டும் படித்து உற்சாகத்துடன் எழுந்து விடுவார்கள்.

கேது பகவான் இப்போது உங்களது ராசிக்கு 9ம் வீட்டில் வந்தமர்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலைச்சுமை குறையும். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்.

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்களெல்லாம் விலகும். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். பணவரவு உண்டு என்றாலும் அத்தியாவசியச் செலவுகளை மட்டும் செய்யப்பாருங்கள்.

அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமதம், மொழி, மாற்று இனத்தவர்களால் திடீர் திருப்பங்கள் உண்டாகும்.

பொதுவாக சொல்ல வேண்டும் என்றால்,மாதக் கணக்காக கிடப்பில் இருந்த காரியங்களையெல்லாம் ஒவ்வொன்றாக முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் வெற்றி உண்டாகும். கழுத்தை நெறிக்குமளவிற்கு கடன் பிரச்னையை சமாளித்து செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. வர வேண்டிய பணமும் கைக்கு வரும்.

நண்பர்களை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.

கவனமாக இருக்க வேண்டிய விசயங்கள் அசாத்திய தைரியத்தோடு எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம்.சகோதர உறவுகளில் கவனம் தேவை!

Credited by: அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

For More Information Click link Above.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here