யார் தவறு?

0
368

யார் தவறு?

ஆணுக்கு பெண்ணின் மீது ஈர்ப்பு வருவதும்,பெண்ணுக்கு ஆணின் மீது ஈர்ப்பு வருவதும் யதார்த்தமான விசயம் அதுவும் படிக்கும் காலமான டீன்ஏஜ் வயதில் ஹார்மோன்களின் விளையாட்டால் ஈர்ப்பின் தன்மை மிக அதிகமாக இருக்கும்.

இந்த தன்மையை கடக்க ஆண்,பெண்ணை சகசமாக பழக விட வேண்டும் என சொல்லப்பட்டாலும் சினிமா,நவீன தொழில்நுட்பங்கள் அனைவரின் மனதில் வக்கிர எண்ணங்களை வளர்த்து வைத்து இருக்கிறது.

நிற்க!

ஒரு பெண்ணுக்கு தன்னம்பிக்கையும்,மற்றவரின் சலனமற்ற பார்வையும் வரவேண்டும் என்றால் அது தந்தையின் கையில் தான் உள்ளது.

மகளோடு ஒரு தோழியாக மனம் விட்டு பேச வேண்டும் ஒரு தோழியை போல் பழக வேண்டும்.அனைத்து விசயங்களை நகைச்சுவை கலந்து பரிமாறி கொள்ள வேண்டும் அப்படியே அழகாக அறிவுரையும் சொல்ல வேண்டும்.

எனக்கு தெரிந்து பெண்ணுக்கு நாப்கின் வாங்கி கொடுக்கும் தந்தையும் உண்டு.மகளை அரவணைத்து ஒரு தோழனாக பழகும் தந்தையுன் எந்த பெண்ணும் எதையும் மறைப்பதில்லை,தடம் மாறுவதில்லை.

அப்ப அப்பா இல்லாத பெண் என்றால்?அந்த பெண்களின் மனதில் அம்மா வைராக்கியத்தை ஊட்ட வேண்டும்.அப்பா இல்லாவிட்டாலும் நம்மை ஏளனமாக நினைத்தவர்களுக்காக வாழ்ந்து காட்டவேண்டும் என உணர்த்த வேண்டும்

ஒரு ஆண் மற்ற பெண்களிடம் கண்ணியமாக பழகவேண்டும் என்றால் அது தாயின் கைகளில்தான் உள்ளது.

மகனிடம் ஜாலியாக ஒரு தோழி போல் பழக வேண்டும்.பெண்ணுக்கு சமுதாயத்தில் ஏற்படும் இன்னல்கள்,இன்பம்,துன்பங்களை தான் கடந்து வந்த பாதை,தான் பட்ட துன்பங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அன்றாட நடந்த நிகழ்ச்சிகள மகனிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் ஒரு பெண் மீது ஈர்ப்பை பற்றி அவன் பேசும்போது, பதறி அவனை குற்றம் சொல்லாமல் நகைச்சுவையாக கலாய்த்து அதில் உள்ள நன்மை தீமைகளை உணர்த்த வேண்டும்.

நம் வீட்டில் ஒரு ஆணோ,பெண்ணோ பெற்றோர்கள் அவர்களிடம் மனம் விட்டு பேசுவது மட்டுமல்ல அவர்களிடம் நண்பர்களாக பழகவில்லை என்றால் அவர்கள் செல்லும் பாதையை பெற்றோர்களால் கணிக்க முடியாமல் போய்விடும்.

Credit by : அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here