ரிசபம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020

0
192

ரிசபம்- ராகு,கேது பெயர்ச்சி 2019-2020

மதிப்பெண்.78/100.

தற்போது ராகு பகவான் இரண்டாம் இடத்திற்கும்,கேது பகவான் எட்டாம் இடத்திற்கும் வருகிறார்கள்.

ஏற்கனவே நாங்கள் அஷ்டம சனியில் தடுமாறுகிறோம் இய்த பெயர்ச்சி நல்லா இருக்காதா என பயப்பட வேண்டும் இது நல்ல பலன்களை கொடுக்கும் அமைப்புதான்.

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.

மனம் ஒரு நிலைப்படும்.எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டீர்கள்.

இளமைக் கூடும். திடீர் பணவரவு உண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நெருங்கிய சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை தீர்க்க உதவிகள் கிடைக்கும்.

திருமணம், கிரகப்பிரவேசம் என வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். கடனாக கொடுத்திருந்த பணம் கைக்கு வரும். வேற்றுமொழியினர், மதத்தினர் உதவுவார்கள்.

வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைவழியில் சொத்து சேரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பயணங்களால் அலைச்சல் செலவுகள் அதிகமாகும்.

அதே போல் இக்காலத்தில் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய விசயங்களும் உண்டு.

சிலருக்கு நீங்கள் நல்லதே சொன்னாலும் அதை தவறாகப் புரிந்துக் கொண்டு வம்பில் சிக்க வைப்பார்கள். ஒரு விஷயத்தை செய்வதென்றால் அது முடியாவிட்டால் அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்னரே யோசித்து செய்வது நல்லது.

சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் செலவுகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். குடும்பத்தினரிடம் எதையும் மறைக்க வேண்டாம். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும்.

மொத்தத்தில் பாதகம் இல்லாத பெயர்ச்சிதான் இது.

Credited by: அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

For More Information Click Link Above.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here