வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும்

0
271

வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும் அப்படி இல்லை என்றால் பல்வேறு பிரச்சனைகள் வந்து சேரும் என்று போதித்துக் கொண்டு இருந்தார் குரு

ப்போது ஒரு சீடன் எழுந்து “குருவே நான் கடவுள் ஆகவேண்டும் கடவுளாக வேண்டும் என்று கத்துவதால் கடவுள் ஆகி விடுவேனா அல்லது நான் சாத்தான் ஆக வேண்டும் சாத்தானாக வேண்டும் என்று திரும்பத் திரும்ப கத்துவதால் சாத்தான் ஆகிவிடுவேனா?   வாா்த்தைக்கும் செயலுக்கும்  சம்பந்தம் இல்லையே”

“முட்டாளே உட்காா்”

சிடருக்கு கோபம் வந்துவிட்டது,

முட்டாள் என்று சொன்னதால் ஆத்திரமடைந்து குருவை தகாத வார்த்தைகளால் திட்டினார் அதை பொறுமையாகக் கேட்டுவிட்டு குரு சொன்னார்

சீடரே! உங்களை முட்டாள் என்று நான் சொன்னதற்கு மன்னியுங்கள் தெரியாமல் சொல்லிவிட்டேன்

சில நேரம் அமைதி

அப்போது குரு தொடர்ந்து சொன்னார் பார்த்தீர்களா சீடர்களை வார்த்தைகளை சரியாக உபயோகப்படுத்தாத போது எனக்கு வசைமொழி கிடைத்தது அதே வார்த்தைகளைச் சரியாக சொல்லும்  போது அமைதி நிலவ தனது இதுதான் வார்த்தைகளின் வலிமை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here