விடமுடியாத கெட்ட பழக்கம் என ஏதுமில்லை

0
373

விடமுடியாத கெட்ட பழக்கம் என ஏதுமில்லை

Neander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வு

2007ம் ஆண்டு மதுவுக்கு அடிமையானவர்களை குணபடுத்த ஒரு அறுவை சிகிச்சை முறை கண்டறியபட்டது.

நம் பழக்கங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியின் பெயர் பேசல் காங்க்லியா.. அந்த பேசல் காங்கிலியாவின் புதிர்களை விஞ்ஞ்ஜானிகள் ஒவ்வொன்றாக விடுவித்து வருகிறார்கள்.

ஒரு பழக்கத்தை மூன்றுவிதமாக பிரிக்கிறார்கள்.

  1. ட்ரிக்கர்- தூண்டுகோல்
  2. Routine – பழக்கம்
  3. ரிவார்ட்- பரிசு

உதாரணமாக மது அருந்துபவர்களின்

  • ட்ரிக்கர்: மாலை வேலைகளில் தனிமை
  • ரொடின்: பாட்டிலை எடுத்து வைத்து சரக்கு அடித்தபடி டிவி பார்ப்பது,
  • பரிசு: தனிமையின் கொடுமை குறைகிறது.

மதுவுக்கு அடிமையான ஐந்து பேரை அழைத்து அறுவை சிகிச்சை செய்து மூளையில் பேச காங்கிலியாவில் ஒரு மைக்ரோ சிப்பை பொருத்தினார்கள். சரக்கு அடிக்கவேண்டும் போல தோன்றினால் அவர்கள் செய்யவேண்டியது ஒரு பட்டனை அழுத்துவது, உடனே அது பேசல் காங்கிலியாவுக்கு சிக்னல் கொடுத்து ட்ரிக்கரை மறக்கடித்துவிடும். அவ்வளவுதான்…மது வழக்கம் ஒழிந்தது.

ஆனால் ஆய்வில் யாரும் எதிர்பாராதவிதமாக தோல்வி ஏற்பட்டது. ட்ரிக்கர் அப்போதைக்கு மறக்கும். ஆனால் அந்த தனிமை மீண்டும் நம்மை தாக்குகையில் என்ன செய்வது? மீண்டும் எத்தனை தரம் பட்டனை அழுத்துவது? வெறுத்துபோன மக்கள் அந்த சிப்பை எடுத்துவிடுங்கள் என கேட்டுக்கொள்ள பல மில்லியன் டாலரை கொட்டி செய்த அந்த ஆய்வு தோல்வியில் முடிந்தது.

அந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களை பத்தாண்டுகள் கழித்து எப்படி இருக்கிறார்கள் என பாலோ அப் செய்ய சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஐவரும் சுத்தமாக குடியை நிறுத்தியிருந்தார்கள். எப்படி என கேட்டதுக்கு “ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (ஏ.ஏ)” என சொன்னார்கள்.

அறுவைசிகிச்சையால் சாதிக்கமுடியாத விசயத்தை ஏ.ஏ அமைப்பு எப்படி சாதிக்கிறது?

அது ஒன்றும் அறிவியல் ரீதியான அமைப்பு அல்ல, மருத்துவர்கள் நடத்துவது அல்ல, மிக கட்டுபெட்டியாக எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாத அமைப்பு ஏ.ஏ என சொன்னால் வியப்பாக இருக்கும். அது முன்னாள் குடிகாரர்களால் இன்னாள் குடிகாரர்களுக்காக நடத்தபடும் அமைப்பு. ஆனால் அவர்களின் வெற்றிவிகிதம் 50%. அங்கே போகிறவர்களில் சரிபாதி பேர் குடியை விட்டுவிடுகிறார்கள்.

எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாமல் இயங்கும் இந்த அமைப்பை துவக்கத்தில் பலர் கேலி செய்தாலும் இதன் வெற்றி அவர்களை வாயடைக்க வைக்கிறது. ஆனால் இது இயங்கும் முறையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அந்த அறுவை சிகிச்சை முறையால் தீர்க்க முடியாத சிக்கலை இது தீர்ப்பதாக கூறுகிறார்கள்.

அறுவை சிகிச்சை ட்ரிக்கரை தற்காலிகமாக அகற்றியது. ஆனால் ட்ரிக்கர் மீண்டும், மீன்டும் வருவதால் அது தோல்வியுற்றது.

ஏ.ஏ அமைப்பு ட்ரிகக்ரை அகற்றுவதில்லை, பரிசையும் அகற்றுவதில்லை, பழக்கத்தை மட்டுமே மாற்றுகிறது.

குடியால் அவதியுறுபவர்களுக்கு அது சொல்லும் விசயம் ஒன்றே ஒன்றுதான்.

90 நாள் தொடர்ந்து மீட்டிங்குக்கு வரவேண்டும். வந்தால் 90வது நாள் குடியை விட்டுவிடுவீர்கள் என்பதுதான்.

மீட்டிங்குக்கு போனால் அங்கே டாக்டரோ, விஞ்ஞானியோ யாரும் இருக்கமாட்டார்கள். குடியை விடமுடியாத குடிகாரர்கள் 10 பேர் இருபார்கள். அவர்களுடன் உட்கார்ந்து உங்கள் அவதி, குடியால் துன்புறுவதை மனம் விட்டு சொல்லவேண்டும். ஏன் குடிக்க ஆரம்பித்தீர்கள் எனவும் சொல்லவேண்டும்.

உங்களுக்கு ஒரு மென்டாரை ஒதுக்குவார்கள். அவர் உங்கள் பிரச்சனைகளை எல்லாம் கேட்டுக்கொள்வார் ஆறுதல் சொல்வார். பிரச்சனைகளை சொல்லி அழ ஒரு தோள்கிடைக்கும்.

குடியால் அவதிப்படும் அனைவரும் குடிக்க சொல்லும் காரணம் தனிமை , போர் அல்லது தாங்கமுடியாத சோகம்…இவை மூன்றுதான்

அவர்களுக்கு தேவை இதிலிருந்து தற்காலிக நிவாரணம். அதுதான் அவர்கள் தேடும் பரிசு.

அது ஏ.ஏ அமைப்பின் மூலம் கிடைத்துவிடுவதால் அவர்களுக்கு குடிக்கும் அவசியம் வருவதில்லை. குடியை நிறுத்திவிடுகிறார்கள்.

பலர் குடிக்க காரணமே இதுதான்…அவர்கள் போதையை விரும்பி எல்லாம் குடிப்பது கிடையாது. எதையோ மறக்கத்தான் குடியை நாடுகிறார்கள். குடும்ப அல்லது சமூக சப்ப்போர்ட் கிடைத்தால், பிரச்சனையை உட்கார்ந்து கேட்க ஒரு நட்பு கிடைத்தால் குடியை நிறுத்திவிடுகிறார்கள்.

ஏ.ஏ. அமைப்பின் முறை ட்ரிகக்ரையும் மாற்றவில்லை, பரிசையும் மாற்றவில்லை…பழக்கத்தை மட்டுமே மாற்றியது. அதனால் முழுமையான வெற்றி கிடைக்கிறது.

இம்முறையை பயன்படுத்தினால் நம்மாலும் விடமுடியாத கெட்டவழக்கம் என எதுவுமே இல்லை.

உங்கள் கெட்டவழக்கம் எதுவோ அதை எடுங்கள்.

அதை இப்படி மூன்றாக பிரியுங்கள்.

அதன் ட்ரிக்கர் எது, ரொடின் எது, பரிசு எது என மூன்றாக பிரிக்கவும்.

அப்பரிசை அளிக்கும் வேறு ரொடினை தேர்ந்தெடுத்து பின்பற்றவும்.

அவ்வளவுதான் உங்கள் கெட்ட வழக்கம் உங்களிடமிருந்து விரைவில் அகன்றுவிடும்.

இதை எப்படி செய்வது என வேறு உதாரணங்கள் மூலம் அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

Credited by : Neander Selvan ஆரோக்கியம் & நல்வாழ்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here