வீடு கட்டும் வாஸ்து விதி முறைகள் – பகுதி 4 

0
162

வீடு கட்டும் வாஸ்து விதி முறைகள் – பகுதி 4

சூரிய வாஸ்து வீடுகளை காட்டிலும் சந்திர வாஸ்து வீடுகளே சாலச்சிறந்தது. அதாவது கிழக்கு மேற்காக உள்ள வீடுகளை காட்டிலும் தெற்கு வடக்காக உள்ள வீடுகள் சிறப்பு.

அதிலும் வடக்கு பார்த்த மனையோ வீடோ மிகவும் நல்லது. மிகச்சரியாக வாஸ்து படி வீடு கட்ட வடக்கு பார்த்த மனையே சிறப்பானதாகும்.

பூமி பூஜை வாஸ்து நாளில் போடுவது சிறப்பு….அல்லது நல்ல திதி, நட்சத்திரம், லக்கினம், பார்த்து அன்றய முகூர்த்த லக்கினத்திற்கு நாலு, ஏழு மற்றும் எட்டாமிடங்கள் சுத்தமாக இருக்கும் படி நேரம் கணித்து பூஜை போடவேண்டும்.

எக்காரணம் கொண்டும் ராகு எமகண்ட நேரங்களில் வாஸ்து பூஜை செய்யலாகாது. அதே போல நேரச்சந்தியிலும் செய்யக்கூடாது. ஹோரையும் கண்டிப்பாய் பார்க்க வேண்டும்.

ராகு எமகண்டத்தை காலண்டரில் பார்க்காமல் அன்றய தினத்தின் சூரியோதயத்தை கணக்கிட்டு துல்லியமாக பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

தேய்பிறை முகூர்த்தங்களில் வாஸ்து நாள் இருந்தாலும் பூஜை போடுவது சிறப்பல்ல. தின கிரகமான சந்திரன் வளர் பிறை பஞ்சமியில் இருந்து அடுத்து ஏழு நாட்கள் மிகவும் சக்தி வாய்ந்து இருக்கும். அந்த தினங்கள் மிக மிக விஷேஷம்.

அமாவாசையிலும் முழு நிலவு காலங்களிலும் பூமி பூஜை செய்யக்கூடாது. முக்கியமாக அமாவாசையில் பலி கொடுப்பது , கர்ப்ப சாந்தி செய்வது போன்ற காரியங்களை தவிற மற்ற எவ்விதமான சுப காரியங்களையும் செய்யக்கூடாது.

ரோகினி, மிருக சீரிடம், புனர்பூசம், உத்திரம்,அஸ்தம்,அனுஷம்,உத்திராடம்,திருவோணம்,சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் கிரக ஆரம்பம் செய்யலாம்.

மனை யார் பெயரில் இருக்கிறதோ அவர்களின் ஜென்ம நட்சத்திரமாக மேற்கண்ட நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்று வருமாகில் அந்த நட்சத்திரத்தையும் , மனை உரிமையாளர்களின் எட்டாவது நட்சத்திரத்தையும் விலக்க வேண்டும்.

துவிதியை,திருதியை,பஞ்சமி, சப்தமி,தசமி,ஏகாதசி,திரயோதசி ஆகிய திதிகளிலும், ரிஷபம் , மிதுனம், சிம்ம்ம்,கன்னி,துலாம், தனுசு,கும்பம், மீனம் ஆகிய லக்கினங்களிலும் கிரக ஆரம்பம் செய்யலாம்.

மேற்கண்ட முகூர்த்த லக்கினங்களில் மனை உரிமையாளரின் ஜென்ம லக்கினத்திற்கு எட்டாவது லக்கினத்தை தவிர்ப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here