சந்தோசத்திலே பெரிய சந்தோசம் அடுத்தவங்களை சந்தோசப்படுத்துவதுதானுங்க எப்படின்னு பாா்ப்போம்,

ஒரு உளவியல் கதை ஒன்று உண்டு.நன்றாக இருக்கும் மனிதரை தொடர்ந்து நான்கைந்து பேர்,”என்ன ஒரு மாதிரி இருக்கிங்க எதுவும் உடம்பு முடியலையா”கேட்டால் உண்மையிலே உடம்பு முடியாமல் போய்விடுமாம்.இது உண்மையும் கூட..,

மனிதருக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மனச்சோர்வும் ஒரு காரணம் இந்த மனசோர்வை ஒரு மனிதனில் இருந்து நீக்கிவிட்டாலே அவன் புத்துணர்ச்சியாகி எல்லா பிரச்சினையும் எளிதாக சமாளிக்க தயாராகிவிடுகிறான்.

”ரொம்ப கஷ்டமா இருக்குடா”எனும் நண்பரிடம்”இதெல்லாம் ஒரு பிரச்சினையா வாழ்வில் நீ பார்க்காததா,தைரியமா எழுந்திரி”எனும் சொன்னாலே போதும் அவர் மிகுந்த தைரியத்துடன் எழுந்துவிடுவார்.

நாம் ஒருவருக்கு பொருளாதார உதவியோ அல்லது வேற எந்த உதவியோ செய்ய வேண்டியதில்லை பழகுபவர்களிடம் இருக்கும் சிறு குறைகளை புறந்தள்ளிவிட்டு எல்லோரையும் மனப்பூர்வமாக பாராட்டும் குணம் வேண்டும்.

அடுத்தவரை மன தைரியப்படுத்தி அவரின் பலத்தினை சுட்டிகாட்டி பாராட்டும்போது அவர் மட்டும் சந்தோசப்படமாட்டார் அதனால் நம் மனமும் சந்தோச படும்,உள்ளம் தெளிவாகும் இதுபோல் மற்றவரை பாராட்டும் பொறாமை அற்ற குணமே தெய்வமாகும்.

மற்றவர் நம்மை என்ன நினைத்தாலும் சரி எல்லோரிடமும் அன்பாகவும்,பாசமாகவும்,பாசிட்டிவ் அப்ரோச் உடன் மற்றவரை சந்தோசப்படுத்தி பாருங்கள் எல்லோருக்கும் உங்களை பிடிப்பது மட்டுமல்ல உங்களுக்கே உங்களை ரொம்ப பிடிக்கும் ஏனென்றால்..,

“சந்தோசத்திலே பெரிய சந்தோசம் அடுத்தவங்களை சந்தோசப்படுத்துவதுதான்”

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

1 COMMENT

  1. After looking at a number of the blog posts on your site, I really like your way of writing a blog.

    I book marked it to my bookmark site list and will be checking
    back soon. Take a look at my website as well and let me know your opinion.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here