வாங்க வீடு கட்டலாம்! பகுதி -3

0
381

வாங்க வீடு கட்டலாம்! … வாஸ்து விதிமுறைகள் பகுதி -3

தீய சக்தி!

Credited by: Gunaseelan .K

இந்த பதிவை வாசித்து கேலி கிண்டல் செய்யாமல் இது போன்ற அமானுஷ்ய விசயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் கடைபிடிக்கலாம். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த பதிவு மட்டுமே..

பொதுவாக சூரியதிசை என்றால் கிழக்கு , சந்திர திசை என்றால் வடக்கு ஆகும். ஆக நாம் வீடு கட்டும் மனை சூரிய சந்திர பக்கங்கள் அதாவது கிழக்கும் வடக்கும் தாழ்ந்தும் மேற்கும் தெற்கும் உயர்ந்தும் இருக்க வேண்டும்.

எந்தெந்த வர்ணத்தார் எந்த திசையில் குடியிருக்க வேண்டும் என்றெல்லாம் நிறைய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதெல்லாம் இன்றைய சூழலில் சரியாக வராது. அதை விட்டுவிடலாம்.

நாம் வாங்கியிருக்கும் மனையில் ஏதாவது சல்லிய தோஷம் இருக்கிறதா? ஏதாவது தீய சக்திகள் இருக்கிறதா? இதை எப்படி கண்டுபிடிப்பது? பொதுவாக மனையில் போய் நிற்கும் போது சுபமான மனைகள் நல்ல சந்தோசத்தையும் மன நிறைவையும் உண்டுபண்னும்! இது மிக எளிய சூத்திரம் ஆகும்! .

மனையில் நிற்கும் போது மனம் நிறைவாய் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். காரணமேயில்லாமல் பதட்டமாகவும் படபடப்பாகவும் இருந்தால் அந்த மனையில் தீய சக்திகள் இருப்பதாக அர்த்தம் செய்து கொள்ளலாம்.

ஆனாலும் இன்றய காலகட்டத்தில் நீரழிவு வியாதி உள்ளவர் கொலை பசியோடு மனையில் நின்று கொண்டு படபடப்பாக இருந்தால் அதற்கு தீய சக்தி காரணமல்ல ! உடலில் சர்க்கரை சக்தி குறைவே காரணமாக இருக்கும்! ஆக கால சூழ்நிலைகளுக்கு உட்பட்டே இதெல்லாம் நிர்மானிக்க வேண்டும்!

ஒரு மனையில் தீய சக்தி இருப்பதை வெகு சுலபமாக கண்டுபிடிக்கலாம்! நவதானியங்களை விதைத்து நாற்பத்தெட்டு நாள் முளைக்க விட்டு தலைச்சன் கிடேரி பசுமாட்டை அதில் மேய விட்டால் அந்த பசு மிரண்டு ஓடாமல் அமைதியாக மேய்ந்தால் எந்த தீய சக்தியும் இல்லை என்பதை உறுதிபடுத்தி கொள்ளலாம்!

ஒருவேளை அப்படியும் இப்படியும் மிரண்டு ஓடி நவதானிய பயிர்களை மேயாமல் சென்று விட்டால் அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை! ஒயிட் செஸ்னெட் ( ஹோமியோ மருந்து கடைகளில் கிடைக்கும் ஒரு வகையான மலர் மருந்து) 100 மில்லி வாங்கி 5 லிட்டர் நீரில் கலந்து மனை முழுதும் அதிகாலை வேளையில் தெளித்து விட்டு மனையின் நான்கு பக்கமும் சுண்ணாம்பு கரை போட்டு விட்டு மூன்று நாள் கழித்து மீண்டும் பசுமாட்டை கொண்டுபோய் மேய விட்டு பார்த்தால் ஒழுங்காக மேய்ந்தால் தீய சக்தி விலகி விட்டதாக அர்த்தம்!

அதிலும் விலக வில்லையென்றால் மீண்டும் மூன்று செவ்வாய் மூன்று வெள்ளி கிழமைகள் எலுமிச்சை சிகப்புதடவி பலி வைக்க வேண்டும்! கடைசி வெள்ளிகிழமை ஏதாவது ஒரு உக்கிர காளிதேவி சன்னிதியில் சென்று தீர்த்தம் வாங்கி வந்து தெளித்து அதன் பிறகு சோதித்தால் கட்டாயம் தீய சக்திகள் போய்விடும்!

அதற்கப்புறமும் இருந்தால் அந்த இடத்தில் ஏதாவது பிரேதம் அடக்கம் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது! உள்ளே ஏதாவது மண்டை ஓடுகள் அல்லது வராக எலும்புகள் சல்லியம் இருக்கும்! ஏவல், பில்லி , சூண்யம் ஏதாவது அந்த இடத்தில் செய்து புதைத்திருப்பார்கள்.

தகுதியான பூசாரிகளை வைத்து அதர்வன மந்திரம் ஓதி சல்லியங்களை தேடி அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் நவதான்யம் விதைத்து சோதனை செய்ய வேண்டும்! இதுதான் கடைசி சோதனை! இதற்கும் மேல் தீய சக்தி ஒதுங்க வில்லை என்றால் மனையை கைவிட்டு விட வேண்டியதுதான்! . அடுத்த பதிவில் எந்த திசையில் வீடு கட்டலாம்? வீதி குத்தல் என்றால் என்ன என்பதை பார்க்கலாம்!

இன்னும் வரும்!

Credited by: Gunaseelan .K

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here