வாங்க வீடு கட்டலாம் – பதிவு- 1

0
240

வாங்க வீடு கட்டலாம்…… வாஸ்து சாஸ்திர விதி முறைகள்……. பதிவு- 1

Credited by : Gunaseelan .K

மத நம்பிக்கை அற்றவர்கள் பற்றி நான் குறை கூற விரும்பவில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் , ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த வாஸ்து படி வீடு எப்படி கட்டுவது என்ற சந்தேகம் நிறைய இருந்துகொண்டேதான் இருக்கு. ஆக என் அனுபவ வாஸ்து மொழிகளை கொஞ்சம் அப்டேட் செய்கிறேன்.. படித்து பயன் பெறவும்.. வாஸ்துவாவது ஒண்ணாவது என்பவர்கள் அப்படியே பைபாஸ் பிடிச்சு போய்விடலாம். இது உங்களுக்கான பதிவு அல்ல.

சகுன சம்பிரதாயங்கள் இன்றய கால கட்டத்தில் சரிவருமா என தெரிய வில்லை! ஏனென்றால் இந்த சாஸ்திரம் எழுதிய காலம் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது! இருந்தாலும் முடிந்த வரை சகுன சம்பிரதாயங்களை கடைபிடிப்பதால் தீங்கொன்றும் இல்லை என்பதே என் அபிப்ராயம்!
வீடோ கட்டிடமோ கட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள்!.

வீடு கட்டும் தொழிலாளர்கள் வீட்டு உரிமையாளர் வணங்கும் தெய்வங்களை வணக்கும் மான்பு உள்ளவராக இருக்க வேண்டும்!

வீட்டு உரிமையாளரும் வீடுகட்டும் கொத்தனார், மர ஆசாரியார், இரும்பு ஆசாரியார் , போன்றவர்கலும் ஒரே மத மரபினை கொண்டவர்களாக ஒரே சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடிப்பவராக இருக்க வேண்டும்! இந்து என்றால் இந்து! கிருத்துவம் என்றால் கிருத்துவம்!

அப்போதுதான் வாஸ்து பூஜை புனஸ்காரங்களை நிறைவாக செய்ய முடியும்!தெய்வ நிந்தனை செய்யும் நாத்திகர்களை எக்காரனம் கொண்டும் அந்த வீட்டில் வேலை செய்ய அனுமதிக்க கூடாது!

சூதக, மாதவிலக்கு தீட்டு உடைய பெண்கள், இறப்பு தீட்டுடைய வர்கள், பசுவை இழந்தவர்கள், கோ மாமிசம் உண்பவர்கள், சண்டாளர்கள், புலையர்கள், ஆடு கோழி அறுக்கும் மாமிச கடையில் வேலை பார்ப்பவர்கள், பிச்சை பெற்று உண்ணும் சாதுக்கள், விலைமாதர்கள், அங்க குறைபாடு உள்ளவர்கள், நாவிதர்கள், செம்பட்டை பரட்டைதலையோடு திரிபவர்கள் , ஆகியவர்களை வைத்து எந்தவித கட்டிட வேலையும் செய்யகூடாது!…………..

இன்னும் வரும்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here