செய்கூலி சேதாரத்தை மிச்சப்படுத்தி நகை வாங்குவது எப்படி?

0
184

செய்கூலி சேதாரத்தை மிச்சப்படுத்தி நகை வாங்குவது எப்படி?

ஒரு நகைக்கடைக்கு நீங்கள் நகை வாங்கச் சென்றால் 3% முதல் 20% வரை செய்கூலி, சேதாரம் என்று விதவிதமாக மதிப்பிட்டு அன்றைய தங்கத்தின் விலையைவிட அதிகம் வைத்து நகைக்கு பில் போடுவார்கள். நாமும் விலையைக் குறைக்கச் சொன்னால் கால்குலேட்டரில் 27 ஸ்டெப்ஸ் போட்டு 15 ரூபாய் குறைத்து படு பயங்கர டிஸ்கவுன்ட் தருவார்கள்.

இதிலிருந்து தப்பிக்க சுலபமான வழியை நசா விஞ்சானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். நகைக்கடைக்காரர்களின் அழுத்தத்தாலும் தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையாலும் இந்தச் செய்தி பத்திரிக்கைகளில் வெளிவரவில்லை.

இனி நாசா விஞ்சானிகள் கண்டறிந்த அந்த பார்முலாவைப் பார்ப்போம்.

3 சவரனில் நகை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வாங்கும் அன்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2500 என்றால் 3*8=24*2500= 60000.00 ஆக இந்த 60000 தான் நகையில் இருக்கும் தங்கத்திற்கான உண்மையான மதிப்பு. இந்த மதிப்பை எப்படிக் கூட்டுகிறார்கள்?

மூன்று சவரன் நகையில் ஏதோ ஒரு டிசைன் இருக்கும். அந்த டிசைனைச் செய்யக் கூலியாக ஒரு சதவீதத்தைப் போடுவார்கள். அதை 5% என்று வைத்துக்கொள்வோம்.

பின்னர் அந்த நகையைச் செய்யும்போது ஏற்படும் சேதாரத்திற்கு அதாவது நகையை உருக்கி நகாசு வேலை செய்யும்போது அதிலிருந்து உதிரும் துணுக்குகளை அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவதால் நகைக்கடைக்காரர்களுக்கு ஏற்படும் துர்பாக்கிய நட்டமான சேதாரம் இன்னொரு 7%.

ஆக, இப்பொழுது சட்டப்படி உண்மையில் நாம் தரவேண்டிய தங்கத்தின் விலையான் ரூ.60000 12% மதிப்புக் கூட்டப்பட்டு 67200.00 ஆக மாற்றப்பட்டு நம்மிடமிருந்து 7200 ரூபாய் உருவப்படுகிறது.

இந்த 12% விலைமதிப்பை தங்கம் அடைய சுமார் 3லிருந்து 4 வருட காலம் பிடிக்கும். அதன்பிறகு நீங்கள் லாபத்திற்கு வாங்கியவர்களிடமே விற்க நினைத்தாலும் அதிலும் ஒரு 4% ஏதோ ஒரு காரணம் சொல்லி கழித்துவிட்டுத்தான் தருவார்கள்.

இதை அறிந்த நசாதான் இதிலிருந்து மக்களைக் காக்க ஒரு சுலபமான வழியை கண்டுபிடித்திருக்கிறது.

A: 畑は作った?
B: 作らなかった。ダイヤは見つけた?
A: 見つけた!そっちは?
B: 見つけなかったorz
A: あまりできなかったねw

இப்படி ஐந்து ஸ்டெப்களில் அவர்கள் ஜப்பானிய மொழியில் விளக்கி இருந்தாலும் இதன் சாராம்சம் இதுதான்.

அதாவது மேலே சொன்ன உதாரணத்தின்படி நீங்கள் ரூ.60000.00 மதிப்புள்ள நகையை வாங்கும்போது உங்களுக்கு என்ன அளவில் செய்கூலி சேதாரம் மதிப்பிடப்படுகிறதோ அதே அளவைக் குறைத்துக்கொண்டு பணம் கொடுக்கவும்.

மேலே உள்ள உதாரணத்தின்படி நகையின் உண்மையான விலை 60000.00 செய்கூலி மற்றும் சேதாரம் 7200.00 ஆக உங்களுக்கு 67200.00 பில் வந்தால் நீங்கள் 60000.00 மட்டும் கொடுத்தால் போதும்.

இப்பொழுது கடைக்காரர் உங்களிடம் மீதம் உள்ள 7200.00 தாருங்கள் என்று கேட்பார். நீங்கள் சொல்லவேண்டிய பதில் இதுதான்.

நான் கொடுத்த பணம் 67200 தான் அதில் அந்தப் பணத்தை அச்சடிக்க செய்கூலி 3000 ரூபாய், அந்தப் பணத்தை ப்ரின்ட் செய்து சரியான சைஸ் கட் செய்யும்போது ஏற்பட்ட சேதாரம் 4200 ஆக மொத்தம் நான் கொடுத்தது ரூ.67200.00 எனவே நகையைத் தருமாறு வேண்டுகிறேன்.

அவ்வளவுதாங்க.

Credited by : சங்கர் ஜி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here