மே 24, 2024
ஐஎன்எஸ் விக்ராந்தை மூழ்கடிக்க வந்த பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல் காஸி மூழ்கிய கதை

ஐஎன்எஸ் விக்ராந்தை மூழ்கடிக்க வந்த பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல் காஸி மூழ்கிய கதை

8 நவம்பர் 1971 அன்று, பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலான பிஎன்எஸ் காஸியின் கேப்டன் ஜாபர் முகமது கான் ட்ரை ரோட்டில் உள்ள கோல்ஃப் கிளப்பில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர் உடனடியாக லியாகத் பேராக்ஸில் உள்ள கடற்படை தலைமையகத்திற்கு வர வேண்டும் என்ற செய்தி அவருக்கு வந்தது.

அங்கு, கடற்படை நலன் மற்றும் செயல்பாட்டுத் திட்ட இயக்குநர் கேப்டன் போம்பல், இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை அழிக்கும் பொறுப்பை கடற்படைத் தலைவர் அவருக்கு வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார். அவர் ஒரு உறையை எடுத்து ஜாஃபரிடம் கொடுத்து விக்ராந்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் அந்த உறையில் இருப்பதாக கூறினார்.

காஸியின் பொறுப்பில் உள்ள அனைத்து மாலுமிகளின் விடுமுறையையும் ரத்து செய்யுமாறும், அடுத்த பத்து நாட்களுக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை முடிக்க வேண்டும் என்றும் ஜாஃபர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

போருக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட ‘த ஸ்டோரி ஆஃப் த பாக்கிஸ்தான் நேவி’ புத்தகத்தில், “நவம்பர் 14 மற்றும் 24 க்குள் பாகிஸ்தான் கடற்படை அதன் அனைத்து நீர்மூழ்கிக் கப்பல்களையும் முன்பே தீர்மானிக்கப்பட்ட ரோந்துப் பகுதிகளை நோக்கிச் செல்ல உத்தரவிட்டது. காஸி வங்காள விரிகுடாவின் தொலைதூரப் பகுதிக்குச் செல்லும்படி கேட்கப்பட்டார்.

அங்கு இந்திய விமானக் கப்பல் விக்ராந்தைக் கண்டுபிடித்து அழிக்கும் பொறுப்பு அதற்கு வழங்கப்பட்டது. இந்த உத்தியின் விவேகத் தன்மை குறித்த கேள்வி எழுப்பப்படவில்லை. பாகிஸ்தானிடம் இருந்த, எதிரியின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதிக்கு இத்தனை தூரம் சென்று அதை மூழ்கடிக்கும் திறன் கொண்ட ஒரே நீர் மூழ்கிக் கப்பல் காஸி மட்டுமே.