ஏப்ரல் 20, 2024
தனுசு ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 – வேலையில் முன்னேற்றம் ஏற்படும்

தனுசு ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 – வேலையில் முன்னேற்றம் ஏற்படும்

தனுசு ராசிக்கு கலவையான பலன்களைத் தரக்கூடியதாக ராகு – கேது பெயர்ச்சி தர உள்ளது.நிழல் கிரகங்களான ராகு- கேது பெயர்ச்சியான

ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பங்குனி 7 (மார்ச் 21) தேதி மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த நிகழ்வின் போது ராகு ரிஷபத்தில் இருக்கும் கார்த்திகை 2ம் பாதத்திலிருந்து மேஷ ராசியில் இருக்கும் கார்த்திகை 1ம் பாதத்திற்கும், கேது விருச்சிகத்தில் இருக்கும் விசாகம் 4ம் பாதத்திலிருந்து, உங்கள் ஜென்ம ராசியான துலாம் ராசி விசாக நட்சத்திரம் 3ம் பாதத்திற்குப் பெயர்ச்சி ஆக உள்ளார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2022 ஏப்ரல் 12 அன்று மதியம் 1.38 மணியளவில் நிகழ்கிறது. ராகு கேது கிரகங்களுக்கு என தனியோ,நட்சத்திரமோ கிடையாது என்பதால், எந்த ராசியில் ராகு, கேது சஞ்சரிக்கின்றனவோ அந்த நட்சத்திர அதிபதி தரக்கூடிய பார்வை பலனை அள்ளித் தருவார்கள்.

தனுசு ராசிக்கு கலவையான பலன்களைத் தருவதாக ராகு – கேது பெயர்ச்சி பலன் இருக்கும். இந்த நிகழ்வின் போது , கேது ராசிக்கு 11ம் இடத்திலும், ராகு 5ம் இடத்திலும் பெயர்ச்சி ஆகின்றனர்.