ஏப்ரல் 20, 2024
நவம்பரில் முக்கிய கிரக மாற்றங்கள் 2022: 5 ராசியின் தாக்கத்தை ஏற்படுத்தும்

நவம்பரில் முக்கிய கிரக மாற்றங்கள் 2022: 5 ராசியின் தாக்கத்தை ஏற்படுத்தும்

2022 நவம்பர் மாதம் ஜோதிட கண்ணோட்டத்தில் மிக முக்கிய மாதமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் 5 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடக்க உள்ளது.

நவம்பர் 2022 மாதம் ஒவ்வொரு ராசிக்கு பல வகையில் நல்ல மாற்றத்தை தரக்கூடிய நிலையில் இருக்கும்.
சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன், குரு என 5 கிரகங்களின் பெயர்ச்சி நடக்கிறது.

நவம்பரில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள் :
நவம்பர் 11 – சுக்கிரன் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
நவம்பர் 13 – செவ்வாய் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
நவம்பர் 13 – புதன் பகவான் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
நவம்பர் 16 – சூரியன் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஐப்பசி மாதம் தொடங்குகிறது.
நவம்பர் 24 – குரு பகவான் மீன ராசியில் நேர் பெயர்ச்சி ஆகிறார்.

இப்படி நவம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் நிலை மாறுவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

​மிதுன ராசி நவம்பர் மாத பலன்

மிதுன ராசிக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கக்கூடிய மாதமாக மிதுன ராசிக்கு இருக்கும். உங்கள் பணியிலும், பணியிடத்திலும் திருப்தி அடைவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் தங்கள் வேலையை சரியான நேரத்தில் சரியான முறையில் செய்து முடிப்பார்கள். இதனால் உத்தியோகத்தில் உங்கள் பக்கம் வலுவாக இருக்கும். இந்த மாதம் பணியிடத்தில் உங்கள் முயற்சிகளுக்கு முழு பலன் கிடைக்கும். வேலையை மாற்ற முயல்பவர்களுக்கு இந்த மாதம் வெற்றி கிடைக்கும்.

மாணவர்கள் பகுத்தறியும் திறனை வளர்த்துக் கொள்வார்கள், அதன் மூலம் கல்வித் துறையில் வெற்றி பெறலாம். ஆரோக்கியத்திலும் நல்ல மாற்றங்களைக் காணலாம்.

சிம்ம ராசி நவம்பர் மாத பலன்

நவம்பரில் நடக்கக்கூடிய முக்கிய கிரக பெயர்ச்சியால் சிம்ம ராசியினருக்கு இந்த மாதம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழில் துறையில் சில சாதனைகளை செய்யலாம். வருமானம் உயரவும் வாய்ப்பு உண்டு. நல்ல லாபம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவுடன் சிலர் வீடு வாங்கும் கனவை நிறைவேற்றுவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களும் உங்கள் வேலையில் சிறப்பாகச் செயல்படுவார்கள். இதன் விளைவாக, உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு கொடுக்கப்படலாம். தொழிலதிபர்கள் இந்த மாதம் செய்யும் முதலீடுகளால் லாபம் அடைவார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு நவம்பரில் கிரகங்களின் ராசி மாற்றம் பலனளிக்கப் போகிறது. ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள் இந்த மாதம் பல விதத்தில் நற்பலனையும், வெற்றியும் பெறலாம்.

மாணவர்களுக்கும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். இருப்பினும், உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும், ஆனால் நல்ல வருமானம் காரணமாக, அது உங்கள் நிதி நிலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது.

​கன்னி ராசி

நவம்பர் மாத கிரக மாற்றங்கள் கன்னி ராசிக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீங்கள் தொடங்கும் எந்த வேலையிலும் வெற்றி பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள சிலரை விரும்பிய இடத்திற்கு மாறும் வாய்ப்பும் உள்ளது. இந்த மாதம் பண ஆதாயத்திற்கான பல வாய்ப்புகளைப் பெறலாம். பணியிடத்தில் சக ஊழியர்களின் நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். வணிக வர்க்கத்தினருக்கும் இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் வியாபாரம் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

மகர ராசி

மகர ராசியினருக்கு கிரகங்களின் மாற்றத்தால் தொழில் ரீதியாக சிறப்பாக அமைய வாய்ப்புள்ளது. நீங்கள் நல்ல பணம் சம்பாதிக்கலாம். உங்கள் வருமானம் திடீரென அதிகரிக்கும். மேலும், உங்கள் செலவுகளும் குறைந்து சேமிக்க முடியும். இது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் இந்த மாதம் நன்மையையும், புதிய வாடிக்கையாளர்களையும் அடைவார்கள்.