Home News சக்கரத்தில் கோளாறு: வந்தே பாரத் ரயில் சேவை 3ஆவது நாளாக பாதிப்பு!

சக்கரத்தில் கோளாறு: வந்தே பாரத் ரயில் சேவை 3ஆவது நாளாக பாதிப்பு!

14
0

வந்தே பாரத் விரைவு ரயில் சேவை மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது

வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் இந்த வந்தே பாரத் ரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். டெல்லி முதல் வாரணாசி வரை மற்றும் டெல்லி முதல் கத்ரா வரை என 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், 3ஆவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த 30ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், வந்தே பாரத் விரைவு ரயில்கள் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கி அதன் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. முதல் நாள் எருமை மாடு மோதியும் இரண்டாவது நாள் பசு மாடு மோதியும் வந்தே பாரத் விரைவு ரயில் சேதமடைந்த நிலையில், மூன்றாவது நாளாக டெல்லி -வாரணாசி இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயிலின் சக்கரங்கள் சேதமடைந்ததால் வழியிலேயே நின்றது. இதனால், சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் காத்திருந்து தவிப்புக்கு ஆளாகினர்.

மும்பையில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் குறுக்கே, நான்கு எருமை மாடுகள் தண்டவாளத்தில் குறுக்கிட்டது. இதன் காரணமாக வந்தே பாரத் ரயில் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. அதேபோல், இரண்டாவது நாள் பசு மாடு மோதியும் வந்தே பாரத் விரைவு ரயில் சேதமடைந்தது.

Previous articleரொம்ப ஆன்மீக தன்மையுடன் இருக்கும் ராசிகள் எது தெரியுமா
Next articleஇந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல்திட்டம்: 2027 வரை நீட்டிப்பு!
Payal Kapadia
பயல் கபாதியா ஒரு முக்கிய நிருபராகவும், எழுத்தாளராகவும் NEWS LTD THIRUPRESS.COM இல் பணியாற்றுகிறார். அவர் தனது துல்லியமான செய்திகள் மற்றும் தீவிரமான ஆராய்ச்சி திறன் மூலம் ஊடக துறையில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். பயல் கபாதியா பல வருடங்களாக ஊடக துறையில் செயல்பட்டு வருகிறார். இந்தியாவின் முக்கியமான மற்றும் உலகளாவிய செய்திகள், நிகழ்வுகள் குறித்து துல்லியமான மற்றும் விரிவான அறிக்கைகளை வழங்குவதில் அவர் நிபுணராக உள்ளார். அவரது நேர்மையான மற்றும் நேர்மையான பாணி அவரது வாசகர்கள் மத்தியில் உயர்ந்த மதிப்பீடு பெற்றுள்ளது.