Home இந்தியா பால் விலையை உயர்த்த முடிவு… நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் அரசு!

பால் விலையை உயர்த்த முடிவு… நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் அரசு!

46
0

பால் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயர்த்த கேரள மாநில அரசு்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வெளியாக உள்ள தகவலால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கேரள மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். உற்பத்தியாளர்களின் இந்த கோரி்க்கையை பரிசீலித்து அறிக்கை அளிக்க அரசு குழு ஒன்றை நியமித்தது.

பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், விற்பனை முகவர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்த குழு, பால் விலையை உயர்த்துவது தொடர்பான தமது பரிந்துரை அறி்க்கையை அரசிடம் அளி்த்துள்ளதாம்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அரசு அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில்தான் பால் விலையை லிட்டருக்கு எவ்வளவு உயர்த்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது. பால் விலை லிட்டருக்கு 7 முதல் 8 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என தெரிகிறது.

கேரள மாநிலத்தில் அரசுத் துறை நிறுவனமான மில்மா மூலம் நுகர்வோருக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அங்கு தற்போது ஒரு லிட்டர் பால் 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடந்த மாதம் ஆவின் நிறுவனத்தின் ஆரஞ்ச் ரக பால் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்ட நிவையில், தற்போது அண்டை மாநிலமான கேரளாவிலும் பால் விலை அதிகரிக்கப்பட உள்ளது.